அடிமைத்தனம் யாருக்குமே பிடிக்காது. அடிமை என்ற சொல்லே வெறுக்கத்தக்கது. அன்புக்கு அடிமை என்பது சரியா? பின்னாளில் பல இன்னல்களை வரவழைக்கும் அது. அன்பை - பகிர்ந்து கொள்ளத்தக்க ஒன்றாக கருதலாமே ஒழிய அடிமைப்படுத்தும் விதமாக நினைக்கக்கூடாது.
அன்பு ஆசையின் அடிப்படையில் எழுவது என்று சிலர் கூறுகிறார்கள்.
ஆசை + அன்பு = அடிமை.
எந்த விஷயத்தின் மீதும் ஆசை ஏற்படும்போதும் கூடவே அன்பும் ஏற்படும். அது கடைசியில் கண்மூடித்தனமான அடிமை உணர்வில் கொண்டு சேர்த்துவிடும்.
அது இல்லாமல் அல் அவள், அவன் இல்லாமல் வாழவே முடியாது என்ற
நிலைமையில் மனது தானாகவே அடிமைப்பட்டு விடும்.
இன்றைய இளைஞர்கள் சினிமா நடிகர்கள் மீது வைத்திருப்பது அன்பா? ஆசையா?
கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்வது சூடம் காட்டுவது, அலகு குத்துவது,
வெறி பிடித்தாற்போல் துள்ளுவது இதெல்லாம் எந்த ரகத்தில் சேர்த்தி?
நடிகர்களின் நடிப்பை ரசிப்பதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
அவர்கள் சொல்வதில் செய்து காட்டுவதில் நல்லவிஷயங்கள் இருந்தால்
ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.
ஆனால் கண்மூடித்தனமாக துள்ளாட்டம் போடுவது அடிமைத்தனத்தில்தான் கொண்டு சேர்க்கும். அது அவர்களின் வாழ்க்கையையே பாதிக்கும்.
புரிந்து கொண்டால் நல்லது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக