சென்னையின் 70 காலகட்டங்களில் சாலைகளில் சிவப்பு நிற பேருந்துகள்தான். கொளுத்தும் வெயிலில் அவை ஊர்ந்து செல்லும் அழகே தனி. கட்டணங்களும் 5 காசு 10 காசு என்றெல்லாம் இருக்கும். 1 காசுக்கு மிட்டாய் எல்லாம் கிடைக்கும். ஏசி இல்லாத தியேட்டர்களில் குறைந்த கட்டணமே 40 காசுகள்தான். அடுத்து 80 பைசா, 1.25, 1.60, பால்கனி 2/-.
சிவாஜி படமென்றால் சாந்தி, கிரௌன், புவநேஸ்வரியில்தான். மற்ற தியேட்டர்களில்
பழைய படங்கள்தான் ஓடும். புரசையைச்சுற்றி மேகலா, சரவணா, பாலாஜி,
மகாலட்சுமி ,சரஸ்வதி போன்ற தியேட்டர்கள் இருந்தன. இப்போது உண்டா என்று
தெரியவில்லை.
ஒரு முறை பாலாஜியில் பாலும் பழமும் பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.
திரையில் சிவாஜியின் இரண்டாவது மனைவியாக வரும் சௌகார் ஜானகி,
தன் கணவன் தன்னை அலட்சியப்படுத்துகிறானே என்ற வேதனையில் அழுதுகொண்டே ஆவேசமாக வசனங்களை உணர்ச்சிகரமாகப்பேசிக்கொண்டிருப்பார். எனது முன்னிருக்கையில் இருந்த
ஒரு பையன் ' இந்தம்மா பார்ரா சாமான் போடலேன்னு அயுவுது'.
அரங்கமே அதிர்ந்தது. அந்தக்காட்சியமைப்பை அவன் புரிந்து வெளிப்படுத்தியதை எல்லோருமே ரசித்தார்கள்.
சில நேரங்களில் இந்தமாதிரி 'ஆடியன்ஸ் கமெண்ட்ஸ். சூழ்நிலையை உற்சாகமாக்கிவிடும்
புறநகர் பகுதிகளில் அன்று ஒரே காட்சியில் இரண்டு திரைப்படங்கள் என்றெல்லாம் திரையிட்டார்கள். ஒன்று எம்ஜிஆர் அல்லது சிவாஜியின் பழைய கருப்பு வெள்ளைப்படம். மற்றது அன்றைய சமீபத்திய முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் புதிய படம். எம்ஜியார், சிவாஜியின் பழைய படங்களே மூன்று மணி நேரத்துக்குமேல் ஓடும். பின்னர் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஓடும் இந்தப்படம் வேறு. இருந்தும் மக்கள் சலிப்பில்லாமல் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பிறகு மக்களின் உடல் நலம் கருதி அரசு அதை தடை செய்தது என்று நினைக்கிறேன்.
இனி அடுத்த பதிவில்...
என் ப்ளாக் விலாசம் http://subramanian-thamirabharani.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக