'தொடரும்' என்று போட்டதால் படத்தின் சஸ்பென்ஸ் அவிழ்க்கப்படும் என்று நினைக்கவேண்டாம். வழக்கம்போல் வெள்ளித்திரையில் காண்க.
நான் சொல்ல வந்தது வேறு.
படம் முழுவதும் ப்ரித்விராஜ் கதா பாத்திரத்திற்குத்தகுந்தாற்போல் வேட்டி,
சட்டையுடன் உலா வருகிறார். கோழிக்கோட்டின் நகர ஆளுமைக்கு ஏற்ப
அவர் பேசும் வசனங்களில், ஹலாக், ஹமுக்கே போன்ற முஸ்லிம் மக்கள்
அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள் இடம் பெறுகின்றன அவரை ஹிந்து
குடும்ப பின்னணியில் காண்பித்தாலும், இது ஒரு இயல்பான காட்சியாக
காண்பிக்கப்படுகிறது.
கோழிக்கோடு முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி . பெரும்பாலோர் NRI
என்று அழைக்கப்படும் வெளி நாடு வாழ் மக்கள்.
நோட்டு இரட்டிப்பு என்று அழைக்கப்படும் கள்ள நோட்டு பரிமாற்றத்தை
ப்ரித்வியின் வளைகுடா வாழ் நண்பன் 'தப்பித்தால் தப்பில்லை ' எனும் ரீதியில்
நியாயப்படுத்துகிறான். 'ஒரே ஒரு முறை செய்தால் போதும் பின்னர் உனக்கு
யோகம்தான்' இந்த கோழிக்கோடு நகரத்தில் எத்தனையோ பேர் இதைச்செய்கிறார்கள்.
உனக்கென்ன பயம்' என்று உசுப்பேற்றி விடுகிறான்.
அந்த ஒரு க்ஷணத்தில் மனப்பிறழ்வுக்கு உட்படும் ப்ரித்வி துணிந்துவிடுகிறார்.
கள்ளநோட்டை வாங்குவதற்காக ப்ரித்வி செல்லும் இடம் ஒரு கல்யாண வீடு. வீட்டின் மேல் தளத்தில் ஒரு கும்பலே கள்ளநோட்டை
கட்டுக்கட்டாக எண்ணி அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. அந்த வீட்டில் கல்யாணம்
இரவு நேரத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதாரத்தையே சீர் குலைக்கும் இந்த மாபியா கும்பல்
இங்கேயே இயங்கிக்கொடிருப்பதை இயக்குனர் பட்டவர்த்தனமாக
வெளிக்காட்டுகிறார். காட்சியின் இயல்பு அந்த அளவுக்கு நம்பகத்தன்மை
கொண்டிருக்கிறது.
படத்தில் மசாலாவின் நெடி துளி கூட இல்லை. இரண்டு பாடல்கள்.
அதுவும் போகிற போக்கில். திலகனுக்கென்று ஒரு கிளைக்கதை போகிறது.
அவரின் கதாபாத்திரத்தின் வலிமைக்காக. உறுத்தாத காமிரா.
இந்தப்படத்தை சுறா, வெடி, தல, வால் இவர்களை வைத்து தமிழில் எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். ....'சுத்தம்'.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக